உக்ரைன் மற்றும் ரஷ்யா போரை என்னால் மட்டுமே நிறுத்த முடியும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவது உள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது என்பதும் இது உலக நாடுகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் வீடியோ மூலம் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் நான் அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா உக்ரைன் போர் வந்திருக்காது என்றும் நான் அதிபராக அதிபராக இருந்திருந்தால் ரஷ்ய அதிபர் புதின் போரையை தொடங்கி இருக்க மாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.
போர் சூழல் ஏற்பட்டது தெரிந்து இருந்தால் நான் உடனே பேச்சுவார்த்தை நடத்தி 24 மணி நேரத்திற்குள் போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த முட்டாள்தனமான போரை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் நான் அமெரிக்க அதிபராக வேண்டும் என்றும் புதின் நான் என்ன சொன்னாலும் கேட்பார் என்றும் போரை நிறுத்த எனக்கு ஒரு நாளுக்கு மேல் ஆகாது என்றும் தெரிவித்துள்ளார்