எனவே, ஓராண்டைக் கடந்துள்ள போதிலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை
இதுவரை இரு நாட்டு தரப்பிலும், பல ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இரு நாடுகள் மீண்டும் சமாதானம் பேச முன்வரவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், தினமும் நடந்து வரும் சண்டைகளால், அங்குள்ள அப்பாவி மக்களும், மாணவர்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் முழுப்பகுதிகளையும் ஆக்ரமிக்க ரஷியா முயற்சித்துள்ளது.
ஏற்கனவே உக்ரைன் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தவும் புதின் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இன்று டொனெட்ஸ்க் பிராந்தியத்திற்குட்பட்ட பக்முத் நகரை ரஷியா படைகள் கைப்பற்றித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், அந்த நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.