திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

Mahendran

வெள்ளி, 24 அக்டோபர் 2025 (18:16 IST)
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூருக்கு அருகில் இயற்கை விவசாயம் செய்து வருவதோடு, தனது சொந்த ஊரான கரூர் மாவட்டத்திலும் விவசாய நிலங்களை பராமரித்து வருகிறார். அவருடைய பண்ணையில் ஆடு, மாடுகள் உட்படப் பல கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.
 
அரசியல் பணிகளுக்கு நடுவில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில், அண்ணாமலை தனது விவசாய பணிகளை மேற்கொண்டு, கால்நடைகளைத் தானே பராமரித்து வருகிறார்.
 
இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பேசுபொருளாகியுள்ளது.
 
அந்த வீடியோவில், அண்ணாமலை தனது பசுக்களுக்கு தீவனம் கொடுப்பது, மாட்டு சாணத்தை அள்ளி சுத்தம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
 
ஒரு முக்கிய அரசியல் தலைவர், எந்தவித தயக்கமும் இன்றி விவசாய மற்றும் கால்நடை பராமரிப்பு பணிகளை செய்யும் இந்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்