உலக போருக்கு நாள் குறிக்க தயாராகும் டிரம்ப்: அச்சத்தில் ஏனைய நாடுகள்!!

Webdunia
புதன், 3 மே 2017 (12:40 IST)
வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு நாடுகள் ஒவ்வொன்றாக களமிறங்க போருக்கு நாள் குறிக்கப்படுகிறதா? என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.


 
 
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அணு ஆயுத சோதனைகளை நடத்துவது என வடகொரியா செயல்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் அமெரிக்காவும் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்களை அனுப்பி எச்சரிக்கை செய்து வருகிறது. இருப்பினும் வடகொரியா இதை எதையும் கண்டுகொள்ளவில்லை.
 
மேலும், உலக நாடுகள் பல அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்ப்படத் தொடங்கியுள்ளன. எனவே, விரைவில் உலக போர் நடக்கும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்