இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், “இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு வலுவான, அசைக்க முடியாத சக்தி வாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தியதற்கு நன்றி. அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்ததில் பெருமைப்படுகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த இரண்டு பெரிய நாடுகளுடன் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளேன். குறிப்பாக, காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார். பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தயாராக இருக்கிறேன்,” என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தியதாக அறிவித்தவுடன், இரு நாடுகளுக்கும் டிரம்ப் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.