சீனாவில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி, சீன, ரஷ்ய அதிபர்களுடன் சிரித்து பேசிய போட்டோ வைரலான நிலையில் அதற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ பேசியபோது “இந்த சந்திப்பு வெறுப்பூட்டுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமரான மோடி, உலகின் 2 பெரும் சர்வதிகாரிகளான புதின் மற்றும் ஜின்பிங்குடன் ஒன்றாக நின்றது வெட்கக்கேடானது. பிரதமர் மோடி தான் இருக்கு வேண்டியது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உக்ரைனுடன் தான், ரஷ்யாவுடன் அல்ல என்பதை புரிந்து கொள்வார் என நம்புகிறோம்.
பாகிஸ்தான் ராணுவத்திற்கு சீனா உதவியுள்ளது. இந்திய எல்லையில் அத்துமீறியுள்ளது. ஆனால் இந்திய வணிகர்களோடு கொஞ்சி குலாவுகிறது. சீனாவின் உறவு நச்சுத்தன்மை வாய்ந்தது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியாதான். ஆனால் அதை ஏற்க அவர்கள் மறுக்கிறார்கள்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K