இலங்கை எம்பி கொலை எதிரொலி: நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து!

Webdunia
திங்கள், 9 மே 2022 (19:48 IST)
இலங்கை எம்பி கொலை எதிரொலி: நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து!
இலங்கை எம்பி ஒருவர் போராட்டக்காரர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இலங்கையில் உள்ள அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இலங்கை தலைநகர் கொழும்பு நோக்கி போராட்டக்காரர்கள் ரயில் மூலம் வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இலங்கையின் எம்பி அமரகீர்த்தி என்பவர் போராட்டக்காரர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
 
 இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும் ஆங்காங்கே சென்று கொண்டிருக்கும் ரயில்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் நிறுத்த ரயில்வே துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் திடீரென ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்