இத்தாலியின் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்த்தீனியா தீவுப்பகுதிகளில் அமைந்துள்ள கடற்கரைகளை ரசிப்பதற்கு, உலகில் பல இடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடலை ரசிக்க கடற்கரைக்கு வந்து பொழுதை கழித்த இரண்டு சுற்றுலா பயணிகள், அங்கிருந்து கிளம்பும்போது, நினைவாக இருக்க பாட்டில்களில் மணலை எடுத்துச் செல்வதற்காக நிரப்பியுள்ளனர். கிட்டத்தட்ட 40 கிலோ எடை மதிப்புள்ள மணலை பாட்டில்களில் நிரப்பியுள்ளனர். இதற்காக இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இத்தாலியில் கடந்த 2017 ஆம் ஆண்டு, கடற்கரைகளை சுற்றுலா பயணிகள் சுகாதாரமான முறையில் பயன்படுத்துவதில்லை என குற்றசாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து இத்தாலியில் உள்ள கடற்கரைகளில் மணல், கூழாங்கற்கள் மற்றும் கடற்பாசிகள் ஆகியவற்றை எடுத்துச் செல்வது சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டது.
”இந்த சட்டடம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது, சாதாரணமாக நினைவாகத்தான் மணலை கொண்டு செல்ல நினைத்தோம்” என சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். ஆனால் எதுவாகினும் சட்ட விரோதமாக சுற்றுலா பயணிகள் நடந்துகொண்டதால் அவர்களுக்கு ஓராண்டு முதல் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.