135 வினாடிகளில் 999 கார் புக்கிங்: முன்பதிவில் மிரட்டிய மஹிந்திரா BE 6 ‘பேட்மேன்’ கார்..!

Siva

ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 (08:31 IST)
இந்திய வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா நிறுவனம், தனது புதிய எலெக்ட்ரிக் காரான மஹிந்திரா BE.6 ‘பேட்மேன்’ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், விற்பனைக்கு வந்த சில நிமிடங்களிலேயே மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
 
மஹிந்திரா நிறுவனம், இந்த ‘பேட்மேன்’ காரின் முதல் கட்ட விற்பனையில், வெறும் 300 கார்கள் மட்டுமே விற்பனைக்கு வரும் என அறிவித்திருந்தது. ஆனால், முதல் 999 கார்களுக்கான முன்பதிவு, வெறும் 135 வினாடிகளிலேயே நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து வெளியான தகவல், வாகனத் துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மஹிந்திரா BE.6 ‘பேட்மேன்’ கார் அதன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப அம்சங்களுக்காக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விலை சுமார் ரூ. 27.7 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
முதல் கட்ட முன்பதிவில்  300 கார்கள் பெறும் அதிர்ஷ்டசாலிகள் யார் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மஹிந்திரா நிறுவனத்தின் இந்த அதிரடி வெற்றி, வாகன சந்தையில் அதன் எதிர்கால திட்டங்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்