பெட்ரோல் கடத்தியதாக குற்றச்சாட்டு: சிறை பிடிக்கப்பட்ட 24 இந்தியர்கள் விடுதலை

வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (18:31 IST)
சிரியாவில் இருந்து ஈரான் நாட்டிற்கு கப்பலில் பெட்ரோலிய எண்ணெய் கடத்தி செல்வதாக குற்றஞ்சாட்டி ஒரு கப்பல் சிறை பிடிக்கப்பட்டது. இங்கிலாந்து அரசால் சிறை பிடிக்கப்பட்ட அந்த கப்பலில் இந்தியர்கள் 24 பேரும் உள்பட பலர் இருந்தனர்.
 
இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்ட இந்திய வெளியுறவுத்துறை இந்தியர்கள் 24 பேரை விடுவிக்க இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு தூதரக அதிகாரிகளுக்கு இந்திய அரசு உத்தரவு பிறப்பித்தது
 
இந்த உத்தரவை அடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து இந்திய மாலுமிகள் 24 பேரையும் விடுவிக்க இங்கிலாந்து அரசு ஒப்புக்கொண்டது
 
இதனை அடுத்து சற்றுமுன் 24 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர்கள் விரைவில் இந்தியாவிற்கு திரும்புவார்கள் என்றும் தகவல்கள் வந்துள்ளது. இந்திய அரசு மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு 24 இந்தியர்கள் விடுவிக்க காரணமாக இருந்ததை அடுத்து மத்திய அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்