ரூ.140 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தான் வாள்! நிர்ணயிக்கப்பட்டதை விட 7 மடங்கு அதிகம்..!

வெள்ளி, 26 மே 2023 (07:54 IST)
திப்பு சுல்தான் வாள் ரூ.140 கோடிக்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மைசூர் கடந்த 1782 ஆம் ஆண்டிலிருந்து 12 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் திப்பு சுல்தான். இவர் பயன்படுத்தி வந்த வாள் லண்டன் நகரில் உள்ள ஏல நிறுவனத்தில் நேற்று ஏலம் விடப்பட்டது. 
 
16ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ஜெர்மனி பிளேடு வடிவமைப்பை கொண்ட இந்த வாள் முகலாயர்களால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த வாள் ரூ.140  கோடிக்கு ஏலம் விடப்பட்டதாகவும் இந்த வாளை ஏலத்தில் எடுத்தவர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை என்றும் ஏலம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
தொலைபேசி மூலம் இந்த ஏலம் நடந்ததாக கூறப்படுகிறது. திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு இந்த வாள் இங்கிலாந்து மேஜர் இங்கிலாந்து மேஜருக்கு அவரது வீரத்திற்காக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்