திப்பு சுல்தானை போல் சித்தராமையாவை முடித்து விடுங்கள்: சர்ச்சை கருத்து கூறிய பாஜக பிரபலம்..!

வியாழன், 25 மே 2023 (10:58 IST)
திப்பு சுல்தானை முடித்தது போல் சிதராமையாவையும் முடித்து விடுங்கள் என பாஜக முன்னாள் அமைச்சர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அமைச்சர் அஸ்வத் நாராயணன் சமீபத்தில் நடந்த போது கூட்டத்தில் 17ஆம் நூற்றாண்டில் மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானை, ஒக்கலிக சமூக தலைவர் இருவர் சேர்ந்து கொலை செய்தனர். அதேபோன்று சித்தராமையாவை முடித்து விடுங்கள் என பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திப்பு சுல்தானை போல் சித்தராமையாவை முடித்து விடுங்கள் என பேசியதற்காக கர்நாடக முன்னாள் பாஜக அமைச்சர் அஸ்வத் நாராயணன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
அஸ்வத் நாராயணன் பேசியது கடந்த பிப்ரவரி மாதம் என்பதும் ஆனால் அப்போது அவர் மீது புகார் அளிக்கப்பட்டபோது புகார் பதிவு செய்யப்படவில்லை என்றும் தற்போது காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்