இன்றைய போட்டியிலாவது களமிறங்குவாரா பென் ஸ்டோக்ஸ்?

சனி, 20 மே 2023 (14:18 IST)
சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 16.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களில் பென் ஸ்டோக்ஸும் ஒருவர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பெரும்பாலான போட்டிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார். காயம் காரணமாக மற்ற போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

அதுமட்டுமில்லாமல் இன்றைய போட்டியோடு அவர் அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளுக்காக இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் சிஎஸ்கே அணிக்குக் கட்டாயம் வெல்ல வேண்டிய இன்றைய போட்டியிலாவது ஸ்டோக்ஸ் களமிறக்கப் படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்