மத்திய அரசு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கும் ஜிஎஸ்டியை குறைத்த நிலையில் சில ஹோட்டல்களில் உணவுகளுக்கு ஜிஎஸ்டியை குறைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் கொண்டு வந்த ஜிஎஸ்டி மறுசீரமைப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் 5 மற்றும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட பொருட்கள் வரி அற்றவையாக அறிவிக்கப்பட்ட நிலையில், 12 சதவீத ஜிஎஸ்டியில் இருந்த பொருட்கள் 5 சதவீத ஜிஎஸ்டிக்கு மாற்றப்பட்டன.
இந்த புதிய ஜிஎஸ்டி முறை 22ம் தேதி அமலுக்கு வந்தது. இந்நிலையில் கடலூரில் பல ஓட்டல்களில் பரோட்டா, சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு தற்போதும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் “பேக்கிங் செய்து கடைகளில் விற்கப்படும் பரோட்டா, சப்பாத்திக்குதான் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் தயாரித்து விற்கப்படும் உணவுகளுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படவில்லை. அதனால் ஹோட்டலில் விற்கும் சப்பாத்தி, பரோட்டா உள்ளிட்ட உணவுகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி தொடர்கிறது” என விளக்கம் அளித்துள்ளனர்.
Edit by Prasanth.K