பாதிரியாரை கட்டி வைத்து கதற கதற கற்பழித்த மூன்று இளம்பெண்கள்!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (12:20 IST)
பாதிரியார் ஒருவரை மூன்று இளம் பெண்கள் கட்டிவைத்து அடுத்தடுத்து கற்பழித்த கொடூர சம்பவம் ஜிம்பாப்வே நாட்டில் நடந்துள்ளது. இதுகுறித்த விசாரணை தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.


 
 
ஜிம்பாப்வே நாட்டின் புலவாயோ என்ற நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். அவரிடம் மூன்று இளம்பெண்கள் பணம் கடனாக பெற்றுள்ளனர். ஆனால் நீண்ட நாட்களாக அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளனர்.
 
இதனால் அந்த பணத்தை திருப்பி வாங்க பாதிரியார் அவர்கள் மூவரும் தங்கியிருந்த வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளார். அப்போது அவர்கள் வீட்டிற்குள் வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.
 
அவர்கள் பணம் தருவார்கள் என நம்பி வீட்டிற்குள் சென்ற பாதிரியார் மீது மூவரும் பாய்ந்து அவரை கட்டிப்போட்டுள்ளனர். அதன் பின்னர் அவரை நிர்வாணப்படுத்தி அவருக்கு ஆணுறை மாட்டிவிட்டு ஒருவர் பின் ஒருவராக பலாத்காரம் செய்துள்ளனர்.
 
மூன்று பெண்களிடமும் மாட்டிக்கொண்ட பாதிரியார் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடியுள்ளார். ஆனால் அவர்கள் விடாமல் அவரை கதற கதற கற்பழித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பின்னர் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு விசாரனை நடந்து வருகிறது.
 
இதில் ஒரு பெண் பாதிரியாரை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் மற்ற இரண்டு பேரும், மற்ற ஆண்களை போல் பாதிரியாருக்கும் பெண்கள் மீது ஆசை இருக்கும் என்பதை நிரூபிக்க தான் நாங்கள் அப்படி நடந்துக்கொண்டோம்.
 
நாங்கள் அவரை தொட்டதும் அவரும் எங்களது விருப்பத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தார் என கூறியுள்ளனர். ஆனால் பாதிரியார் இந்த பெண்களின் வாக்குமூலத்தை மறுத்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
அடுத்த கட்டுரையில்