25 வருடத்தில் கூகுளில் அதிக டிராபிக் இதனால் தான்- சுந்தர் பிச்சை டுவீட்

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (19:15 IST)
உலகின் எந்த ஒரு பொருள் குறித்துத் தேட வேண்டுமானாலும், அதில், முதலிடத்தில் இருப்பது கூகுள். எந்தத்துறை சார்ந்தததையும் பல நூறு பக்கங்களுக்கு தகவல்களை விதவிதமாக அள்ளித் தருவது கூகுள்.

விரைவான தகவல் தரும் கூகுளில், நேற்று, 22 வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி, பிரான்ஸ்- அர்ஜென்டினா இடையே நடந்தது. இதில், 4 -2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா பிரான்ஸை வீழ்த்தி கோப்பையை வென்றது.

ALSO READ: மீண்டும் 10,000 ஊழியர்கள் பணிநீக்கம்: கூகுள் எடுத்த அதிர்ச்சி முடிவு
 
இப்போட்டி குறித்து, 25 ஆண்டுகாலத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு மொத்த உலக மக்களும் ஒரே விசயத்தைக் கூகுளில் தேடிய போது, டிராஃபிக் ஏற்பட்டதாக   கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இணையதளமாக கூகுள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்