உக்ரைன் மீது தெர்மைட் குண்டுகளை வீசியுள்ளதா ரஷ்யா? அதிர்ச்சி தகவல்..!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (07:57 IST)
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தற்போது தெர்மைட் என்ற குண்டுகளை வீசி உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
உக்ரைன் நாட்டில் உள்ள வுஹ்லேடார் நகரின் மீது தெர்மைட் குண்டுகளை ரஷ்யா வீசி உள்ளதாகவும் அந்த நகரை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இதுவரை இரு தரப்புக்கும் நடந்த போரில் சுமார் 1100 பேர் பலியாகி உள்ளனர் என்றும் இந்த நிலையில் வுஹ்லேடார் நகரின் மீது ரஷ்யா தெர்மைட் குண்டுகளை வீசியதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
அலுமினியம், இரும்பு ஆக்சைடு ஆகிய உலோகங்களால் உருவாக்கப்பட்ட இந்த குண்டுகள் மனித உடலில் பட்டதும் சதையை எரிக்கும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. 
 
தெர்மைட் குண்டுகளை பொதுமக்கள் மீது பயன்படுத்துவது போர் குற்றமாக கருதப்படும் நிலையில் ரஷ்யா இந்த குண்டுகளை வீசி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்