ரொம்ப டயர்டா இருக்கே..! திருடிய வீட்டிலேயே மொரட்டு தூக்கம்! – தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (11:24 IST)
தாய்லாந்தில் காவலர் வீட்டிலேயே திருடிவிட்டு அங்கேயே திருடன் படுத்து தூங்கிய சம்பவம் நடந்துள்ளது.

தாய்லாந்தில் காவல்துறையில் பணிபுரிந்து வரும் ஒருவர் வீட்டிற்குள் 22 வயதான அதித் கின் என்ற திருடன் திருட சென்றுள்ளான். காவலர் இரவு நேர பணிக்கு சென்றிருந்த சமயம் உள்ளே புகுந்த திருடன் பொருட்களை எல்லாம் மூட்டையாக கட்டியுள்ளார். பின்னர் திருடிய களைப்பில் அங்கிருந்த அறையில் ஏசியை போட்டுவிட்டு படுத்து உறங்கியுள்ளான்.

திருடன் செம தூக்கம் போட்ட நிலையில் பணி முடிந்து திரும்பிய காவலர் திருடன் சொகுசாய் படுத்து உறங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் தனது சக காவலர்களுக்கு அழைத்து திருடனை பிடித்து கைது செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்