உலகின் இளம்வயது பிரதமராக பதவி ஏற்க இருக்கும் பெண்: எந்த நாட்டில் தெரியுமா?

திங்கள், 9 டிசம்பர் 2019 (22:40 IST)
உலகின் இளவயது பிரதமராக தற்போது உக்ரைன் நாட்டின் பிரதமர் இருந்து வரும் நிலையில் இவரை விட இளையவர் ஒருவர் பிரதமராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
பின்லாந்து நாட்டின் பிரதமர் ஆன்டி ரைய்னி என்பவர் சமீபத்தில் பதவி விலகினார். பின்லாந்து நாட்டில் நடைபெற்ற அஞ்சல் ஊழியர்கள் பெரும் போராட்டத்தை அவரால் அடக்க முடியாத காரணத்தினால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பின்லாந்து நாட்டின் அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் பணி நடைபெற்றபோது ஐந்து முக்கிய கட்சிகள் ஆதரவுடன் சன்னா மெரின் என்பவர் பின்லாந்து நாட்டின் அடுத்த பிரதமராக விரைவில் பதவி ஏற்க உள்ளார்.  இவர் ஆன்டி ரைய்னி அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
34 வயதே ஆன சன்னா மெரின் என்ற பெண் தான் ஒரு நாட்டின் பிரதமராக பதவி ஏற்கவிருக்கும் உலகின் இளைய பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது பெயரை கின்னஸில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது 
 
உலகின் இளம் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சன்ன மெரினுக்கு உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இளம்வயதில் பிரதமர் பதவி ஏற்கும் சன்னா மெரின் புதிய சாதனைகளைப் படைத்த பின்லாந்து நாட்டை முன்னேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்