அரசுப்பள்ளி மாணவர் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட மேலை நாடுகளுக்கு செல்ல தேர்வு

வெள்ளி, 11 ஜனவரி 2019 (17:25 IST)
அரசுப்பள்ளி மாணவர்  பின்லாந்து மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட மேலை நாடுகளுக்கு செல்ல தேர்வு – இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து கலக்கிய அரசுப்பள்ளி கரூர் அருகே அரசுப்பள்ளியின் அறிவியல் கண்டுபிடிப்புகள் !!
கரூர் மாவட்டம், வெள்ளியணை ,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர் ர. சதிஷ்குமார் மேலை நாடுகளான  பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு கல்விப் பயணம்  செல்ல தேர்வாகியுள்ளார்.
 
தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல்,தொழில் நுட்பம்,கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் தனித்திறனுடன்  சிறந்து விளங்கும் மாணவர்களை மேலை நாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்துச்செல்லும் வகையில் தமிழகத்தில் இருந்து  50 மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில்  தேர்வு செய்யப்பட்டு, ஜனவரி 20 முதல் 30 ஆம் தேதி வரை பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய  மேலை நாடுகளுக்கு கல்விப் பயணமாக சுற்றுலா சென்று பின்லாந்து நாட்டில் உள்ள அறிவியல் மையம், பள்ளிகளில் சோதனை முறையில் கற்றல் – கற்பித்தல், ரொபோடிக்ஸ் ஆய்வகம் ,கப்பல் துறைமுகம் , தேசிய அருங்காட்சியகம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், ஆகிய இடங்களை பார்வையிடும் பொருட்டு தேர்வு பெற்றுள்ளார்கள்.

இதில் கரூர் மாவட்டம் , வெள்ளியணை,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் ர.சதிஷ்குமார் என்ற மாணவர் கடந்த 4 ஆண்டுகளாக தம் வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபால் வழிகாட்டல் மூலம், பள்ளி இளம்  விஞ்ஞானிகள் குழுவில் இணைந்து சூரிய சக்தியில் இயங்கும் நவீன கழிவறை, நீர்த்தாங்கிகள் செறிவூட்டல், பாதை மாறிய தேனீக்களால் பாதித்த விவசாயம் ,ஆகிய கண்டுபிடிப்புகளுடன் ஆய்வுக்கட்டுரையை, பள்ளிக் கல்வித்துறை ,தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, அறிவியல் நகரம், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா ஆகிய துறைகளின் கீழ் நடைபெற்ற மாவட்டம், மாநிலம், தென்னிந்திய ,தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்று முதல் பரிசாக தங்கப் பதக்கம், கோப்பை, பாராட்டுச் சான்று பெற்றுள்ளார். தமது அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் அறிவியல் கோட்பாடுகளை புரிந்துப் படித்து, பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில்  அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்  பெற்று தற்போது மேலை நாடுகளுக்கு கல்விப் பயணமாக பின்லாந்து மற்றும் ஸ்வீடன் செல்ல தேர்வாகி, தமிழகத்திற்கும் இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
 
மேலும், இந்த அரசுப்பள்ளியில் அறிவியல் துறையில் சிறந்த வழிகாட்டி ஆசிரியர் இருந்தால் யார் வேண்டுமானாலும், சாதிக்கலாம் என்றும் இதுவரை, பல்வேறு அறிவியல் படைப்புகளை மேற்கொண்டதாகவும், கடந்த வருடம் தேசிய குழந்தைகள் மாநாட்டில், மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டதினால், தேசிய அளவில் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் பெருமை மிக்க அந்த மாணவர், இதே போல, 343 இளம் விஞ்ஞானிகள் இது போல உருவாகி இருப்பதாகவும் ஆகவே அவர்களை ஊக்குவிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்ட அந்த மாணவர், சதீஸ்குமார் இந்த திட்டத்திற்காக ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். 
 
இது போன்ற மாணவர்களை உருவாக்கும், பட்டதாரி ஆசிரியர் தனபால் தான், கடந்த 2005 ம் ஆண்டு முதல் பணியாற்றி வருவதாகவும், பள்ளி மாணவர்களுக்கு 343 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டு இரு மாணவர்கள் ஜப்பான் சென்றுள்ளதாகவும், தற்போது சதீஸ்குமார் என்கின்ற மாணவர் பின்லாந்து, ஸ்வீடன் செல்வதாகவும், இது போன்ற கிராம புற மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து வரும் அனைத்து தரப்பினருக்கும் ஆசிரியர் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்