டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவராக இருப்பவர் எலான் மஸ்க்.
இவர், கார் தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்துள்ளதைப் போன்று மனித மூளையை சிப்பால் இயங்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
சமீபத்தில், டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3 ½ லட்சம் கோடிக்கு விலைக்கு வாங்கியதுடன், பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இது உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன்பின்னர், டெஸ்லா நிறுவனத்தின் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை அவர் விற்றுத்தான் டுவிட்டர் நிறுவனத்தின் மீது ரூ.3 ½ லட்சம் கோடி முதலீடு செய்தார் எனக் கூறப்பட்ட நிலையில், அவரது சொத்து மதிப்பு ரூ.15.28 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.
எனவே, உலகின் முன்னணி ஆடை விற்பனையகம் LVMH - Louis vuittonநடத்தி வரும் பிரான்ஸ் நாட்டு தொழில் அதிபர் பர்னார்ட் அர்னால்ட் உலகின் டாப் பணக்கார்களில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் சொத்து மதிப்பு ரூ.15.29 லட்சம் கோடியாகும்.