இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் உள்ள நிலையில் இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு இந்தியா பல தடைகளை விதித்த நிலையில், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு தடைகளை விதித்துள்ளது. இரு நாட்டு எல்லைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் ராணுவம் போர் ஒத்திகையிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபை சேர்ந்த பாலக் ஷேர் மாஸி மற்றும் சூரஜ் மாஸி என்ற இருவரும், இந்திய ராணுவத்தின் கண்டோன்மண்ட் பகுதிகள், அமிர்தசரஸில் உள்ள இந்திய ராணுவ விமான தளம் ஆகியவற்றின் லொக்கேஷன் மற்றும் தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளனர் என அம்மாநில டிஜிபி கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார். அவர்கள் பாகிஸ்தானி ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்காக உளவாளிகளாக வேலைப்பாரத்தாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இரு நாடுகளிடையே போர் மூளும் சூழல் உள்ள நிலையில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K