காணாமல் போன கத்தரிக்கோல்! நிறுத்தப்பட்ட 32 விமானங்கள்! - ஜப்பானில் பரபரப்பு!

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2024 (15:26 IST)

ஜப்பானில் கடை ஒன்றில் கத்தரிக்கோல் காணாமல் போனதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

 

 

உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு பல விமான நிறுவனங்களின் விமானங்கள் நாள்தோறும் பறந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு பயணிக்கும் விமானங்கள், எஞ்சினில் பறவை மோதுவது, தொழில்நுட்ப கோளாறு அல்லது பயணிகள் உடல்நிலை குறித்த பிரச்சினைகளுக்காக நிறுத்தப்படுவதும், தாமதமாவும் அதிகபட்சமாக ரத்து செய்யப்படுவதும் கூட நடக்கிறது. ஆனால் கத்தரிக்கோல் காணாமல் போனதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது.

 

ஜப்பானின் ஹொக்கைடோ விமான நிலையத்தில் சமீபத்தில் 2 கத்தரிக்கோல்கள் காணாமல் போயுள்ளன. இந்த கத்தரிக்கோல்களை குற்றச் செயல்களுக்காக வேண்டி யாராவது எடுத்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால் விமான நிலையத்தில் பயணிகள் வருகை தடை செய்யப்பட்டு மீண்டும் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

 

இதனால் ஏற்பட்ட தாமதத்தால் 36 விமானங்கள் ரத்தானதுடன், 200க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஆகியுள்ளது. ஆனால் அதற்கு அடுத்த நாள் அதே கடையில் காணாமல் போன கத்தரிக்கோல்கள் கண்டறியப்பட்டுள்ளன. கத்தரிக்கோல் காணாமல் போனதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட சம்பவம் ஜப்பானியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்