செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு ஓய்வு...
வியாழன், 14 பிப்ரவரி 2019 (13:34 IST)
கடந்த 15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு நாசா ஓய்வு கொடுத்துள்ளது.
அதாவது சுமார் 90 நாட்கள் மட்டுமே ஆயுள் நாட்களைக் கொண்ட ஆப்பர்ச்சுனிட்டி ரோவரானது கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அனுப்பப்பட்டு 2004 ஜனவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் தரைஇறங்கிறதாக தெரிகிறது.
விஞ்ஞானிகளை ஆச்சர்யமூட்டும் விதத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்தது, பல ஆய்வுகள் மேற்கொண்டு செவ்வாய் குறித்த பல உண்மைகளை பூமிக்கு தகவலாக அனுப்பியது.
இந்தரோவரை செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்ப்பதற்காகவே அனுப்பினார்கள். இதன் ஆயுள் 90 நாட்கள் என்று கணக்கிடப்பட்ட நிலையில் சுமார் 15 ஆண்டுகள் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆச்சர்யம் தந்தது.
செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட புழுதிப்புலால் ரோவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் கம்பியூட்டரில் கோளாறு ஏற்பட்டு தன் செயல்பாடுகளை அது மொத்தமாக நிறுத்தியதாகவும் நாஸா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ரோவர் 45.2 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து உள்ளது. 217, 594 புகைப்படங்களை அனுப்பியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.