இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடுமையான போட்டி ஏற்படும் சூழ்நிலையை சமாளிக்கும் விதம் குறித்து ஆராயப்பட்டது. வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய புள்ளிகளை எடுக்கும் சூழ்நிலையை சமாளிப்பதில் வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் இடையே வித்தியாசம் தெரிந்தது.
ஆய்வின் முடிவில் போட்டியின் கடுமையான சூழ்நிலையில் வீரர்கள் மிகவும் திணறினார்கள். அதே நேரத்தில் வீராங்கனைகள் சூழ்நிலைகளை மிக எளிதாக எடுத்துக் கொண்டு சமாளித்தனர். அதே நிலைதான் சாதாரண மக்களிடமும் நிலவியது. அதன் மூலம் கடுமையான சூழ்நிலையை சமாளிப்பதில் ஆண்களை விட பெண்கள் திறமைசாலிகள் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.