குச்சி ஐஸுக்குள் குடியிருந்த குட்டிப்பாம்பு! வாங்கி சாப்பிட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Prasanth Karthick

வெள்ளி, 7 மார்ச் 2025 (11:29 IST)

ஆசையாய் வாங்கிய ஐஸில் விஷம் வாய்ந்த குட்டி பாம்பு இருந்ததை ஒருவர் போட்டோ எடுத்து பகிர்ந்துள்ள நிலையில் அது வைரலாகியுள்ளது

 

அன்றாடம் கடைகளில் வாங்கி உண்ணும் உணவுகளில் மோசமான விஷயங்கள் கண்டெடுக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அப்படியான ஒரு சம்பவம் தாய்லாந்திலும் நடந்துள்ளது. தாய்லாந்தை சேர்ந்த ரேபன் நெக்லங்பூன் என்ற நபர் அங்குள்ள வண்டிக்கடை ஒன்றில் ப்ளாக் பீன் குச்சி ஐஸை வாங்கியுள்ளார். அதன் மேல் பகுதி உருகியபோது அதற்குள் பாம்புக்குட்டி ஒன்றின் தலை தெரியவே அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

தொடர்ந்து ஐஸ் உருகியபோது அந்த பாம்பு முழுவதுமாக ஐஸுக்கும் உறைந்து இருந்தது தெரிய வந்துள்ளது. அதை அவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். விஷம் வாய்ந்த அந்த பாம்பு குச்சி ஐஸ் செய்யும் டையில் விழுந்தது கவனிக்கப்படாமல் அது தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்