தாய்லாந்து நாட்டில் சுமார் 2000 ஆயிரம் யானைகள் உள்ளன. நமது ஊர்களை போலவே அவ்வப்போது வயல்களுக்குள் புகுந்துவிடும் யானைகள் அங்குள்ள சோளம், கரும்பு போன்றவற்றை அபேஸ் செய்து கொண்டு செல்லும் சம்பவங்களும் நடந்து விடும். இதற்காக யானைகள் வரவை தடுக்க இரவிலும் காவல் பணிகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வடக்கு தாய்லாந்தின் சியாங் மாய் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் ஏதோ சலசலப்பு கேட்க அங்கிருந்த காவலர்கள் டார்ச் லைட்டை தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள். கரும்பை சுவைக்க ஆசைப்பட்டு தனியாக வந்துள்ளது குட்டி யானை ஒன்று. கரும்பு தோட்டத்திற்கு அது புகுந்திருந்த நிலையில் ஆட்கள் சிலர் டார்ச் லைட்டோடு வருவதை கண்டதும் பயந்து ஒளிய முயற்சித்துள்ளது. உடனே அங்கிருந்த மின்கம்பம் ஒன்றின் பின்னால் சென்று ஒளிந்துள்ளது.