பயங்கரவாதிகளின் தளங்கள் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பலியான நிலையில், அதற்கு பதில் தாக்குதலுக்காக இந்தியா திட்டமிட்டு வந்த நிலையில் நேற்று இரவு ஆபரேஷன் சிந்தூர் மூலம் 9 பயங்கரவாதிகளின் தளங்களில் குண்டு வீசி தாக்கியது இந்திய ராணுவம்.
இதில் லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட 4 பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் இந்த தாக்குதல் குறித்து உலக நாட்டுத் தலைவர்கள் பலரும் பல கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் இஸ்ரேல், இந்தியாவின் இந்த தாக்குதலை ஆதரித்துள்ளது.
இதுகுறித்து பேசிய இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் “இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கையை இஸ்ரேல் ஆதரிக்கிறது. அப்பாவி மக்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்களை நிகழ்த்தி விட்டு தப்பிக்க முடியாது என்று பயங்கரவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதுதவிர இஸ்ரேலை சேர்ந்த மக்கள் பலரும் தாங்கள் இந்தியாவின் நிலைபாட்டை ஆதரிப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Edit by Prasanth.K