தாலிபன்களுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா ஆகஸ்ட் 31 க்குள் தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் இன்னும் அவர்கள் சொன்ன அளவுக்கான மக்களை இன்னும் வெளியேற்றவில்லை. இதனால் அமெரிக்க படைகள் வெளியேறுவதில் கால நீட்டிப்பு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதை முற்றிலும் மறுத்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அமெரிக்காவுக்கு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பிரிட்டிஷ், பிரான்ஸ் நாடுகள் கோரிக்கைவிடுத்தன.
இப்போது அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தவர்கள் பெருமளவில் வெளியேற்றப் படுகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்ற நிபுணர்களை வெளியேற்றுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என தாலிபன்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவர்களின் சேவை நாட்டுக்கு தேவை எனவும் கூறியுள்ளார்.