5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

Mahendran

திங்கள், 27 அக்டோபர் 2025 (13:35 IST)
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை, த.வெ.க. தலைவர் விஜய் இன்று  மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
சந்திப்புக்காக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கரூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். மாமல்லபுரத்தில் உள்ள விடுதி அரங்கில் தனித்தனியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை விஜய் கேட்டறிந்தார்.
 
மருத்துவ செலவுகள், குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு உதவுவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
 
முன்னதாக, இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அக்டோபர் 18 அன்று தலா ரூ.20 லட்சம் நிதியுதவி த.வெ.க. சார்பில் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. விஜய் கரூருக்கு சென்று சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து நேரில் ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்