ஒரே நாளில் மிக அதிக அளவாக 21, 600 பேரை மீட்ட அமெரிக்கா!!

புதன், 25 ஆகஸ்ட் 2021 (10:43 IST)
கடந்த 24 மணி நேரத்தில், மிக அதிக அளவாக 21, 600 பேரை அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டு வெளியேற்றி இருக்கிறது. 
 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கன் நாட்டு மக்கள் பலரும், வெளிநாட்டினரும் ஆப்கானிஸ்தானை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர்.
 
இந்நிலையில் அமெரிக்கா தனது விமானங்கள் மூலமாக அமெரிக்க மக்கள் மட்டுமல்லாது. ஆப்கன் மற்றும் பிற நாட்டு மக்களையும் மீட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவலில் கடந்த 24 மணி நேரத்தில், மிக அதிக அளவாக 21, 600 பேரை அமெரிக்கா வெளியேற்றி இருக்கிறது.
 
ஆம், 37 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 12,700 பேரும், நட்பு நாடுகளின் விமானங்கள் மூலம் 8,900 பேரும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவால் மீட்டு அழைத்துச் செல்லப்பட்டனர் என தெரியவந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்