விமான நிலையத்தை மூடிய தலீபான்கள்; சிக்கிக் கொண்ட இந்தியர்கள்! – துப்பாக்கி சூட்டால் பரபரப்பு!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (11:51 IST)
காபூல் விமான நிலையத்தில் மக்கள் அதிகமாக கூடுவதால் விமான நிலையத்தை மூடுவதாக தலீபான்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலகாலமாக ஆப்கானிஸ்தானில் அரசு ராணுவத்திற்கும், தலீபான்களுக்கும் இடையே யுத்தம் நடந்து வந்த நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறியதால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வாழும் பிறநாட்டு மக்களை திரும்ப வரும்படி அந்தந்த நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்காக சிறப்பு விமானங்களை உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் அனுப்ப தொடங்கியுள்ளன. இதனால் வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிர கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் கும்பல் கும்பலாக இரவிலிருந்து தங்கள் நாட்டு விமானங்களுக்காக காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

காபூல் விமான நிலையத்தில் மக்கள் அதிகமாக கூடி வரும் நிலையில் விமான நிலையத்தை மூடியதுடன், மற்ற நாடுகளுடனான விமான சேவைகளையும் ரத்து செய்வதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர். இன்று பகல் 12.30க்கு இந்திய விமானம் செல்ல இருந்த நிலையில் அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் தலீபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் யாரும் பலியானார்களா என்பது குறித்து தெரியவரவில்லை, தலீபான்களின் இந்த முடிவால் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்