ஹிலாரி கிளிண்டன் கைது செய்யப்படுவாரா?? பரபரப்பு தகவல்!!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (13:03 IST)
அமெரிக்க அதிபராக தேர்ந்து எடுக்கபட்டு உள்ள டொனால்டு டிரம்ப், பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஹிலாரி கிளிண்டனை கைது செய்து வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.


 
 
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் பதவி வகித்தபோது ராணுவ தகவல்களை தனது சொந்த மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
 
மேலும், தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரது கிளிண்டன் அறக்கட்டளை மூலம் முறைகேடாக நிதிகளை பெற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார்.
 
இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இவ்விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்து தனி வழக்கறிஞரை நியமித்து விசாரணை செய்வேன் என டிரம்ப் தெரிவித்தார். 
 
இந்நிலையில், நேற்று நடந்த முடிந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். மேலும், அவர் ஏற்கனவே கூறியது போல ஹிலாரி கிளிண்டனை விசாரணை செய்ய தனி வழக்கறிஞர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
தற்போது அதிபராக பதவி வகிக்கும் ஒபாமா ஹிலாரிக்கு பொது மன்னிப்பு வழங்கினாலும், டிரம்ப் பதவி ஏற்ற பின்பு வழக்குகளின் குற்றம் நிறுபிக்கப்பட்டால் ஹிலாரி கைது செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அடுத்த கட்டுரையில்