சிரிய ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில், சிரிய அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, நிகழ்த்தப்பட்டு வரும் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இதுவரை பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியின் 'டவுமா' நகரில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ராணுவத்தினர் வான்வழி தாக்குதலை நடத்தினர். இந்த வான்வழித் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உள்பட 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு அமைப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.