46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அபூர்வ பறவை – உடலை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

Webdunia
ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (10:17 IST)
46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அபூர்வ பறவை ஒன்றில் உடலை ஆராய்ச்சியாளர்கள் கண்டிபிடித்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சைபீரியாவின் வடகிழக்கு பனிமண்டல பகுதியில் வேட்டைக்கு சென்ற வேட்டையர்கள் சிலர் பனியில் புதைந்து உறைந்து கிடந்த பறவை ஒன்றின் சடலத்தை கண்டெடுத்திருக்கிறார்கள். அது மிகவும் பழைய உடலாக தெரிந்ததால் அதை ஸ்வீடன் நாட்டு அருங்காட்சியக ஆய்வாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த பறவை எந்த காலக்கட்டத்தை சேர்ந்தது என்பதை கண்டறிவதற்காக நடத்தப்பட்ட கார்பன் டேட் சோதனையில் ஆச்சர்யகரமான உண்மைகள் தெரிய வந்துள்ளன. அந்த பறவை பனியுகம் என்றழைக்கப்படும் 46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. இந்த பறவையில் உடலை ஆய்வு செய்வதன் மூலம் பனியுக உயிரினங்கள் குறித்து பல தகவல்கள் தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பனியுகம் என்பது உலகம் முழுவதும் பனி மட்டுமே சூழ்ந்த ஒரு காலக்கட்டமாக இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த காலத்தில் மாமோத் எனப்படும் பெரிய யானை, நீண்ட கோரை பற்களை கொண்ட புலிகள் போன்றவை வாழ்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்