கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் சர்ச்சுகள், ஹோட்டல்கள் ஆகியவற்றை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 250 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனை தொடர்ந்து, பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் தேச பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதில், ”பர்தா அணிய உடனடியாக தடை விதிக்க வேண்டும், முகத்தை மறைக்கும் வகையில் யார் உடை அணிந்து இருந்தாலும், அவரது அடையாளம் தெரிவதற்காக, முக மறைப்பை நீக்குமாறு கேட்க போலீஸாருக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும், மறைப்பை நீக்க சம்மதிக்காவிட்டால், அந்த நபரை வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.
மேலும், ”இன, மத அடிப்படையிலான பெயர்களை கொண்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு தடை வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளது.