மாணவர்கள் கெடு.. ஷேக் ஹசீனாவை அடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகல்..

Siva
சனி, 10 ஆகஸ்ட் 2024 (16:09 IST)
இன்று பிற்பகல் 1  மணிக்குள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலக வேண்டும் என மாணவர்கள் கேடு விதித்திருந்ததை அடுத்து வங்கதேச உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகியதால் வங்கதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசு கலந்து ஆலோசிக்காமல் தலைமை நீதிபதிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுதற்காகவும் இதனால் மாணவர்கள் மீண்டும் போராட்டம் செய்ததாகவும் தெரிகிறது.

மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தன்னிச்சையாக நடந்து கொண்டதால் இன்று பிற்பகல் ஒரு மணிக்குள் அவர் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் கெடு விதித்தனர். இதை அடுத்து வங்கதேசத்தின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் என்பவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து மாணவர்களும் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தலைமை நீதிபதி கூட்ட இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் பதவி விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் என்பவர் நேற்று முன்தினம் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்