கலவரத்தை பயன்படுத்தி வங்கதேசத்தில் 1200 கைதிகள் தப்பியோட்டம்... இந்தியாவிற்குள் வர வாய்ப்பா?

Siva

சனி, 10 ஆகஸ்ட் 2024 (07:30 IST)
வங்கதேசத்தில் நிகழ்ந்த வன்முறை மற்றும் கலவரத்தை பயன்படுத்தி 1200 கைதிகள் சிறையில் இருந்து தப்பி விட்டதாகவும் அவர்கள் இந்தியாவிற்குள் தப்பி வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்துகிறது.

வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை மற்றும் கலவரங்கள் நடந்து வரும் நிலையில் 1200 கைதிகள் தப்பிள்ளதாகவும் அவர்கள் ஆயுதங்களுடன் இந்தியா வர முயற்சி செய்யலாம் என்றும் வங்கதேச பாதுகாப்பு அமைப்பு, இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே எல்லைகளில்  உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இரு நாடுகளை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் அவ்வப்போது தகவல் தொடர்பில் ஈடுபட்டு பாதுகாப்பு குறித்த தகவல்களை பரிமாறிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் எல்லை பகுதியில் தப்பியோடிய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் வங்கதேச பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்தியாவில் உள்ள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக தெற்கு மற்றும் வடக்கு வங்கதேச எல்லைகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழிகள் மூலமாக தான் தங்கம், போதைப்பொருள் கடத்தப்பட்டு நடத்தப்பட்டு வரும் நிலையில் கைதிகள் இந்த வழியாக தப்பி இந்தியாவுக்கு வந்துவிட கூடாது என்பதற்காக பாதுகாப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் கண்காணிப்புடன் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தப்பிய கைதிகளில் 400 பேர் மீண்டும் சரண் அடைந்துள்ளதாகவும் மற்ற கைதிகளை பிடிப்பதற்கு வங்கதேச அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்