வேற்று கிரகவாசிகளை தொடர்பு கொண்டால் ஆபத்து : எச்சரிக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்

திங்கள், 26 செப்டம்பர் 2016 (17:30 IST)
வேற்று கிரகவாசிகளை தொடர்பு கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி உலகப் புகழ் பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஏலியன்கள், பறக்கும் தட்டு என்று நாம் கேள்வி பட்டிருந்தாலும் யாரும் இன்னும் எதையும் கண்ணில் பார்த்ததில்லை. பறக்கும் தட்டை மட்டும் அவ்வப்போது பார்த்ததாக சிலர் கூறுவதுண்டு. வேற்று கிரக வாசிகள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கென்றே பல மில்லியன் டாலர்களை அமெரிக்க அரசு செலவு செய்து வருகிறது.
 
இந்நிலையில் விண்வெளி மற்றும் வேற்று கிரகவாசிகள் பற்றி ஏராளமான தகவல்களை அவ்வப்போது கூறி வரும் ஸ்டீபன் ஹாக்கிங் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
 
அவர் கூறும்போது “விண்வெளியில் ஒரு அறிவார்ந்த வாழ்க்கை இருக்கலாம். கண்டிப்பாக ஒரு நாள் அங்கிருந்து சிக்னல் நமக்கு கிடைக்கும். ஆனால், பதில் அனுப்புவதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சூரிய மண்டலத்தில் உள்ள நமது இருப்பை, வேற்று கிரகவாசிகளுக்கு நாம் தெரியப்படுத்தக் கூடாது. அது ஆபத்தில் முடியும்” என்று பேசினார்.
 
தற்போது மட்டும் அல்ல, இதற்கு முன்பும் அவர் வேற்று கிரக வாசிகளால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்து கருத்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்