மதுரைக்கு வறேன்.. யாரும் என் பின்னாடி வராதீங்க! - நடிகர் விஜய் தொண்டர்களுக்கு கோரிக்கை!

Prasanth Karthick

வியாழன், 1 மே 2025 (14:59 IST)

நடிகர் விஜய் ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக மதுரை செல்லும் நிலையில் தொண்டர்களுக்கு தன்னை பின் தொடர வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் தனது கடைசி படமான ஜனநாயகனில் நடித்து வரும் நிலையில் அதன் ஷூட்டிங்கிற்காக கொடைக்கானல் செல்கிறார். அதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து வாகனத்தில் செல்கிறார். 

 

விஜய் வரும் தகவல் தெரிந்ததுமே இன்று காலை முதலே மதுரை விமான நிலையத்தில் ரசிகர்கள், தொண்டர்கள் குவிந்துள்ளனர். விஜய் ரோடு ஷோ நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் தற்போது விஜய் சென்னையிலிருந்து மதுரை செல்ல விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் “ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்கிறேன். நான் எனது வேலையை பார்க்கப் போகிறேன். அங்கு யாரும் எனது வாகனத்தை பின் தொடர வேண்டாம். 

 

அதை பார்ப்பதற்கு மிகவும் பதற்றமாக உள்ளது. பத்திரமாக வீட்டிற்கு செல்லுங்கள். விரைவிலேயே கட்சி சார்பில் மதுரை மண்ணுக்கு வருவேன். உங்களை சந்திப்பேன்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்