பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்ப காலக்கெடுவை நீட்டித்த மத்திய அரசு..

Siva

வியாழன், 1 மே 2025 (13:49 IST)
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் குடிமக்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்புவதற்கான தடைகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளன.

காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டு, ஏப்ரல் 30ஆம் தேதி முதல் பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தானியர் பெரும் அவலத்தில் சிக்கினர்.

இதற்கிடையில், கடந்த ஆறு நாட்களில் தூதரக அதிகாரிகள் குடும்பத்தினர், துணை ஊழியர்கள் உள்பட 786 பேர் இந்தியாவில் இருந்து புறப்பட்டனர்.

ஆனால், இந்தியர்களை திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் பெண்கள், ஏராளமான ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்தவர்களும் வெளிநடப்பு கட்டாயமாக்கப்பட்டதால் எதிர்ப்பு எழுந்தது. பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் இது தொடர்பாக அரசிடம் நேரடியாக மனு கொடுத்தனர்.

இந்த சூழலில், மத்திய அரசு மனிதநேய அடிப்படையில் தீர்வு கொண்டுள்ளது. தற்போது, அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தான் குடிமக்கள் ஏப்ரல் 30க்கு பிறகும் தங்கள் நாட்டுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள்.

மறு அறிவிப்பு வரும் வரை, இந்த சலுகையை பயன்படுத்தலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்