1 லட்சம் பேரை பலி கொண்ட அணுமின் நிலையத்தில் சூரிய ஒளி மின்நிலையம்

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (16:03 IST)
உக்ரைனில் 1 லட்சம் பேரை பலி கொண்ட செர்னோபில் அணுமின் நிலையம் பகுதியில் சூரிய ஒளி மின்நிலையம் அமைக்கப்படுகிறது.


 

 
1986ஆம் ஆண்டு உக்ரைன் சோவியத் ரஷியாவுடன் இருந்தபோது செர்னோபில் நகரில் இருந்த அணு உலை வெடித்து, அதில் இருந்து வெளியான கதிர்வீச்சால் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
 
அதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள 4,100 கி.மீ பரப்பளவு, மக்கள் வாழ தகுதியில்லாத இடமாக அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த அணு மின்நிலையம் பகுதியில் சூரிய ஒளி மின்நிலையம் அமைக்க உக்ரைன் அரசு திட்டமிட்டுள்ளது.
 
உலகிலேயே பெரிய சூரிய ஒளி மின்நிலையம் அமைக்க உக்ரைன் அரசு முடிவுசெய்துள்ளது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்