1500 விலங்குகள் படுகொலை: எலான் மஸ்க் நிறுவனம் மீது போலீஸார் விசாரணை!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (22:36 IST)
எலான் மஸ்க்கின் நியூராங்க் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உலக முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் எலான் மஸ்க்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் ஆகிய  நிறுவனங்களின்  தலைவராக இருப்பவர் எலான் மஸ்க்.

இவர், கார் தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்துள்ளதைப் போன்று இவர் தன் நியூராலிங்க் என்ற நிறுவனத்தின் மூலம், மனிதர்களின் மூளையில் சிப்பை பொறுத்தி அதை கணிணியின் மூலம் இயங்க வைக்கஉள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

ALSO READ: மனித மூளையில் சிப் வைத்து கணிணி மூலம் இயக்கும் எலான் மஸ்க்!
 
இந்த நிலையில், இந்தச் சோதனைக்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், விலங்குகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில், செம்மறி ஆடுகள், குரங்குகள், பன்றிகள் என சுமார் 1500 க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நியூராலிங்க் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்