பூச்சிகளை உணவாக உட்கொள்வது பற்றிய சிங்கப்பூர் அரசு கோரிக்கை

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (22:11 IST)
சிங்கப்பூர் நாட்டில் பூச்சிகளை உணவாக உட்கொள்வது தொடர்பான கால் நடை தீவனத் தொழில் துறையிடம் சிங்கப்பூர் அரசு அனுமதி கேட்டுள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் அதிபர் ஹலிமா யாகோப்  தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாடு தொழில்துறையில் முன்னேறிய நாடு ஆகும். இங்கு அதிகளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிங்கப்பூரில் ஆடு, கோழி, மாடு ஆகியவை இறைச்சி உணவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில்,  பூச்சிகளை உணவாக உட்கொள்ள வேண்டிய ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிடம் இருந்து  நடைமுறைகளை  சிங்கப்பூர் அரசின் உணவுத்துறை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

அங்குள்ள கால் நடை தீவன தொழில்துறையிடம் முறையான அனுமதி கேட்டுள்ள நிலையில்  இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், சிங்கபூரில் வசிப்பவர்கள் பூச்சிகளைஎண்ணெயில் பொரித்தும், அல்லது பச்சையாக  உணவாக உட்கொள்ளலாம் என ததகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்