சட்டிஸ்கர் மாநிலத்தில் ரிசர்வ் படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த மோதலில், துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில், நக்சல்கள் தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகிறது.
இதையடுத்து, நாராயண்பூர் பகுதியைச் சேர்ந்த நக்சல் தடுப்பு படை போலீஸார் அங்கு சென்று அவர்களைத் தேடினர். அப்போது, நக்சல்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியில் சுடவே, இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர்.
பின்னர், ரிசர்வ் படையினர் தாக்குதல் அதிகரிக்கவே, நக்சல்கள் பயந்து அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அப்பகுதியில் நக்சல்கள் பயன்படுத்திய ஆயுதங்களையும் போலீஸார் கைப்பற்றினர்.