ஒமிக்ரானோடு கொரோனா தொற்று முடிவுக்கு வரும்: விஞ்ஞானிகள் தகவல்

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (20:51 IST)
ஒமிக்ரான் வைரஸோடு உலகில் கொரோனா தொற்று முடிவுக்கு வர வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
உலக அளவில் தற்போது ஒமிக்ரான் மிக வேகமாக பரவி பரவி வந்த போதிலும் பெருந்தொற்று ஒமிக்ரானோடு முடிவுக்கு வரும் வகையில் ஒதுக்கப்பட்டு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் 
 
ஒமிக்ரான் வைரஸை சமாளிக்கும் அளவுக்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டால் அதன் பிறகு எந்த வைரசும் மனிதர்களை பெரிய அளவில் பாதிக்காது என்று கலிபோர்னியா பல்கலைக்கழக நோய் எதிர்ப்பு துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து ஒமிக்ரான் தொற்று நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் ஒமிக்ரான் மிக வேகமாக பாதித்து பெரும் அலையை ஏற்படுத்தும் என்றும் இந்த அலை முடிந்து விட்டால் மனித இனத்திற்கே ஒரு நம்பிக்கை வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்