அலுவலகம், கல்லூரி, பொது இடம் என பல்வேறு இடங்களில் இருக்கும் போது சிலருடையை ரிங்டோன்களை கேட்டால் நமக்கு கோபம் வரும். எரிச்சலடைய வைக்கும் ரிங்டோன்களால் சிலரை பிடிக்காமல் கூட போகும். நேரில் அவர்களை திட்டவோ அடிக்கவோ முடியாவிட்டாலும் கற்பனையில் அதை செய்துவிடுவோம்.
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவனின் ரிங்டோன் பிடிக்காததால் மாணவி ஒருவர் அவரை கடுமையாக தாக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நன்றி: SIN WATCH
மாணவன் பிளே செய்த ரிங்டோன் பிடிக்காத மாணவி ஒருவர் அதனை நிறுத்துமாறு கூறுகிறார். ஆனால் அந்த மாணவி தன்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்ததும் அந்த மாணவன் மீண்டும் அதே ரிங்டோனை பிளே செய்துள்ளான். இதனால் அத்திரமடைந்த அந்த மாணவி அந்த மாணவனை அடித்து துவம்சம் செய்து விடுகிறார். அருகில் இருந்த மாணவி தலையிட்டு அவர்களை விலக்கிவிடுகிறார்.
இந்த சம்பவம் அமெரிக்காவின், பென்சில்வேனியாவில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் நடந்துள்ளது. இந்த வீடியோ அங்குள்ள மாணவர் ஒருவரால் எடுக்கப்பட்டு வைரலாகி வருகிறது.