விலை வைத்து வலை விரித்த சவுதி! ஈரானுக்கு டார்கெட், உலக நாடுகளுக்கு வார்னிங்

Webdunia
திங்கள், 30 செப்டம்பர் 2019 (12:27 IST)
ஈரானை எதிர்த்து உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயரும் என சவுதி இளவரசர் எச்சரித்துள்ளார். 
 
சவுதி அரேபியாவின் அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் மீது கடந்த் 14 ஆம் தேதி அன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குததால் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்படைந்ததோடு, விலையும் உயரும் என அஞ்சப்படுகிறது. 
 
இந்த தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றம்சாட்டி வரும் நிலையில், ஈரான் தரப்பில் ஏமனில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வருகிறது. இந்நிலையில் சவிதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, ஈரானுக்கு எதிரான உலக நாடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறினால், உலக நாடுகளின் நலன்களை அச்சுறுத்தும் வகையில், பிரச்சனை விரிவடையும்.
 
ஆம், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு விலை உயரக் கூடும். இதுவரை கண்டிராத மற்றும் கற்பனை செய்து பார்த்திராத வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு இருக்கும் என்று எச்சரித்துள்ளார். 
 
அதோடு, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் சவுதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த உலக நாடுகளின் பொருளாதாரமும் ஸ்தம்பித்து விடும் என்றும் ஈரான் மீதான நடவடிக்கை அமைதி வழையில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்