பாகிஸ்தானை தாக்கும் நாடுகள் மீது நாங்கள் தாக்குவோம்: சவுதி அரேபியா அதிரடி அறிவிப்பு..!

Siva

வியாழன், 18 செப்டம்பர் 2025 (07:59 IST)
சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் ஒன்று தாக்கப்படும் பட்சத்தில், அது மற்ற நாட்டின் மீதான தாக்குதலாக கருதப்படும். இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
 
இந்த ஒப்பந்தம் நேட்டோ (NATO) போன்ற பாதுகாப்பு உடன்பாடுகளுக்கு இணையாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சம், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் இரு நாடுகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானது என வரையறுப்பதாகும். 
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த ஒப்பந்தத்தின்படி இனிமேல் பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், சவுதி அரேபியா இந்தியாவை தாக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்தியாவுடன் நட்பு நாடாக இருக்கும் சவுதி அரேபியா இந்தியாவை தாக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்