கைகுலுக்கல் விவகாரம்.. நடுவர் மேல் புகாரளித்த PCB.. நிராகரித்த ஐசிசி!

vinoth

செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (16:47 IST)
அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளைக் கடந்த 15 ஆண்டுகளாக விளையாடுவதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதுகின்றன. சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதலை அடுத்து இரு அணிகளும் நேற்று ஆசியக் கோப்பைத் தொடரில் மோதின.

இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இந்த போட்டி முடிந்ததும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. அதே போல டாஸ் போட்டபோதும் இரு அணிக் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. கிரிக்கெட் போட்டிகள் முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது நூறாண்டு காலமாக நீடித்து வரும் வழக்கம்.

இந்நிலையில் டாஸ் போடுவதற்கு முன்பாக ஆட்ட நடுவர்  ஆண்டி பைகிராஃப்ட் பாகிஸ்தான் கேப்டன் அஸ்கர் அலி ஆகாவிடம் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்விடம் கைகுலுக்க வேண்டாம் என கூறியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றச்சாட்டை வைத்தது. இதனால் அவரைத் தொடரில் இருந்து நீக்கவேண்டும் என PCB, ஐசிசியிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் பாகிஸ்தான் வாரியத்தின் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது ஐசிசி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்